கேரளாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் விற்பனை செய்த நாடக நடிகை கைது செய்யப்பட்டார்.

#Kerala #drugs #Actress #Arrest
Mani
2 years ago
கேரளாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் விற்பனை செய்த நாடக நடிகை கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இடப்பள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த குடியிருப்பில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த வீட்டில் தங்கியிருந்த அஞ்சுகிருஷ்ணா (வயது 29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நாடக நடிகை என்பதும், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த சமீர் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அஞ்சுகிருஷ்ணாவை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்து 52 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அஞ்சு கிருஷ்ணாவை எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அஞ்சுகிருஷ்ணாவுடன் வசித்து வந்த சமீர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் தெரியவந்தது. தலைமறைவான சமீரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!