எரிபொருள் நிலையத்தில் மிரட்டல் விடுத்தவர்கள் கைது

#Police #SriLanka #sri lanka tamil news #Arrest #petrol #Fuel #Lanka4
Kanimoli
2 years ago
எரிபொருள் நிலையத்தில் மிரட்டல் விடுத்தவர்கள் கைது

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக் குட்பட்ட கைதடி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்த இருவர் நேற்று காலை சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திருத்த வேலை இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் வழங்காமையைக் காரணம் காட்டி ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து விட்டு சென்றிருந்தனர்.

இந்நிலையில் சி.சி.ரி.வி கமெராவினை ஆதாரமாகக் கொண்டு இதுதொடர்பாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நல்லூர் மற்றும் அரியாலைப் பகுதியயைச் சேர்ந்த இருவர் இவ்வாறு கைது செய்யப் பட்டிருப்பதுடன், மிரட்டல் விடுப் பதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!