மனதைக் கட்டி வாழின்..அலையும் மனதோடு அலையாத வாழ்வு ஆழ்கடல் போல இங்கு அமைதி வந்தால்....இன்றைய கவிதை 17-03-2023
#கவிதை
#மனம்
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#Mind
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago
மனதைக் கட்டி வாழின்
==========================
அலையும் மனதோடு
அலையாத வாழ்வு
ஆழ்கடல் போல இங்கு
அமைதி வந்தால்.
மனதை கட்டி நாம்
வாழ்வை நகர்த்தும்
நுட்பம் கற்றுத் தர
நல்ல முறை வருமா?
நேற்றைய துயர் இனி
நாளை வந்தால்
மனதும் அழுதிங்கு
இறப்பை நாடுமே!
மரணம் கூட இப்போ
நம்மைக் கண்டு
நடுங்கும் வகையில்
ஒரு மனத்திடம் தான்.
அடிப்படையில் ஒரு
நல்ல பாதை வேண்டும்.
அஃது இருந்திட வேண்டும்
நல்ல பழக்கம் தான்.
தொடக்கம் நன்றே
தொடங்கிய போதும்
முடித்து வைக்கும் அந்த
வாழ்வு நன்றாகிடனும்.
......... அன்புடன் நதுநசி.