இத்தாலியில் தொழில் வாய்ப்பு: வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

#SriLanka #Sri Lanka President #work #Embassy #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
இத்தாலியில் தொழில் வாய்ப்பு: வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கை பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 
 
எதிர்வரும் 27ஆம் திகதி முதல் இணையத்தளம் ஊடாக இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய 87,702 தொழிலுக்கான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

பாரவூர்தி சாரதிகள், கட்டுமான தொழில்துறையினர், உணவக துறை, மின்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளில் தொழில்வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இத்தாலியில் வேலைவாய்ப்பிற்காக இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  ஏற்கனவே தெரிவித்திருந்தது.

எனவே, இத்தாலிய வேலைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக எந்தவொரு நபருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் எனவும் இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக விண்ணப்பிக்குமாறும்  கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!