முன்னாள் கடற்படைத் தளபதியின் வீட்டில் தங்க முலாம் பூசப்பட்ட பாகிஸ்தான் சிலை திருட்டு!
#SriLanka
#Crime
#Police
#Arrest
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் ராகம இல்லத்தில் களவுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட சிலை மற்றும் நினைவுப் பரிசை திருடியதாகக் கூறப்படும் கடற்படை வீரர் ஒருவரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய கடற்படை வீரர் முன்னாள் கடற்படைத் தளபதியின் வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
விபத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் திருடப்பட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.