அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி மற்றும் ஏனைய நாடுகளின் பெறுமதி!
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளின் மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 350 ரூபாவை தாண்டியுள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு வீதம் ரூ. 327. 20 ரூபாயாக இருந்தது. 332.06 ஆக பதிவானது. டாலரின் நேற்றைய விற்பனை விலை ரூ. 346.37 பதிவாகி இன்று ரூ.351.51 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பத் வங்கியின் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 335 மற்றும் விற்பனை விலை ரூ. 355 என பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹட்டன் நஷனல் வங்கியில் இன்று டொலரின் பெறுமதி 335 ரூபாவாகவும் விற்பனை விலை 355 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 332.96 ஆகவும், இன்று ரூ.331.58 ஆகவும் குறைந்துள்ளது. ஆனால், நேற்று டாலரின் விற்பனை விலை ரூ. 351.50 ஆக பதிவானது. 355 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, செலான் வங்கியின் டொலரின் கொள்வனவு விலை நேற்றைய தினம் ரூபா 325 ஆக பதிவாகியிருந்த நிலையில் இன்று அது 329 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனிடையே நேற்று டாலரின் விற்பனை விலை ரூ. 346 ஆக உயர்ந்து இன்று ரூ.351 ஆக இருந்தது.
இதேவேளை அவுஸ்திரலிய டொலரின் விற்பனை பெறுமதி 236 ஆகவும் கொள்முதல் பெறுமதி 213 ஆகவும், கனேடிய டொலர் விற்பனை பெறுமதி 258 ஆகவும் கொள்முதல் பெறுமதி 231 ஆகவும்,
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 375 ஆகவும் கொள்முதல் பெறுமதி 344 ஆகவும், சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை பெறுமதி 380 ஆகவும் கொள்முதல் பெறுமதி 344 ஆகவும், ஐக்கிய இராச்சியத்தின் ஸ்டேரிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 426 ஆகவும் கொள்முதல் பெறுமதி 391 ஆகவும் பதிவாகியுள்ளது.