நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகை மிருணால் தாகூர்.

#TamilCinema #Cinema #Actress
Mani
2 years ago
நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகை மிருணால் தாகூர்.

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக “சீதா ராமம்” படத்தில் நடித்ததற்காக இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் பிற மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

சீதாராமுக்குப் பிறகு மிருணாள் தாகூரின் மார்க்கெட் உயர்ந்தது. அவருக்கு பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், தமிழில் சூர்யா தனது 42வது படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இன்னொரு தமிழ் படத்தில் நடிக்கவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

தெலுங்கில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கும் புதிய படத்திற்காக ரூ.6 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றார்.

மிருணாள் தாகூர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இவ்வளவு சம்பளம் வாங்கியிருப்பது சக நடிகைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!