தென் கொரியா-ஜப்பான் உச்சிமாநாட்டிற்கு இடையே வடகொரியா மீண்டும் மற்றொரு ஏவுகணையை ஏவியது.

#NorthKorea #SouthKorea #Japan #Missile
Mani
2 years ago
தென் கொரியா-ஜப்பான் உச்சிமாநாட்டிற்கு இடையே வடகொரியா மீண்டும் மற்றொரு ஏவுகணையை ஏவியது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி கடந்த 13ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடந்தது. இதற்கு பதிலடியாக ஜப்பான் கடலில் இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது.\

இந்நிலையில் தென்கொரியா மற்றும் ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதற்காக தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஜப்பான் சென்று அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடாவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

உச்சிமாநாட்டிற்கு சில மணி நேரங்களுக்கு முன் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. தென்கொரிய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, காலை 7:10 மணிக்கு பியோங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து கிழக்கு கடல் பகுதிக்கு ஏவுகணை ஏவப்பட்டது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!