வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டிய அவசியம் தற்போது இல்லை

#Student #Tamil Student #students #School Student
Mani
2 years ago
வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டிய அவசியம் தற்போது இல்லை

வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டிய அவசியம் தற்போது இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, கிண்டியில் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் இன்புளுயென்சா காய்ச்சல் பாதிப்பால் பதட்டமோ, அச்சமோ தேவையில்லை எனக் கூறினார்.

இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்க இருந்த இறுதித் தேர்வுகளை 17ஆம் தேதியே தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!