மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் - மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது

#India #Rescue #children
Mani
3 years ago
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் - மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் நேற்று 8 வயது சிறுவன் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து, போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது 43 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளதாகவும், ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மீட்புப் பணியில் மூன்று மாநில மீட்புக் குழுக்கள் மற்றும் ஒரு தேசிய மீட்புக் குழு ஈடுபட்டுள்ளன.

பதினைந்து மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டுள்ளது, மேலும் சிறுவனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4