ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்: 3 பேர் கைது

#harassed #Harassment #Sexual Abuse
Mani
3 years ago
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்: 3 பேர் கைது

டெல்லியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலாவிற்காக இந்தியா வந்திருந்த ஜப்பான் பெண் டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் தங்கியிருந்தார்.

ஹோலி கொண்டாட்டங்களை பார்ப்பதற்காக வெளியே வந்த ஜப்பான் பெண்ணை சிலர் வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக் கொண்டு அவர் மீது வர்ணங்களை பூசியதோடு, தலையில் முட்டையும் உடைத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது.

இதுகுறித்து, அதேப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண் பங்களாதேஷ் சென்று விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4