பொலிஸாரின் கண்ணீர்ப் புகை தாக்குதலால் உயிரிழந்த பாதுக்காப்பு உத்தியோகஸ்தர்?

#SriLanka #Police #srilankan politics #Death #Protest #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Mayoorikka
2 years ago
பொலிஸாரின் கண்ணீர்ப் புகை தாக்குதலால் உயிரிழந்த பாதுக்காப்பு  உத்தியோகஸ்தர்?

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் காவல்துறையினரின் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலால் உயிரிழந்துள்ளதாகவே சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை பல்கலைக்கழக மாணவர்களுடனான மோதலின் போது காவல்துறையினர்; கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதன் காரணமாகவே பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக அவர் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

காவல்துறையினரின்; கண்ணீர்ப்புகைப் பிரயோகம் அந்தப்பகுதியை நிரப்பியதுடன் அருகில் உள்ள பாடசாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக பத்திரன தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடனான மோதலின் போது கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல்துறையினர்; பலவந்தமாக நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர் சங்கங்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு தயார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் காவல்துறையினர்; பிரவேசித்ததாக வெளியான செய்திகள் தொடர்பில் ஆராயுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!