கொலன்னாவ வடிநில வெள்ளத்தின் தாக்கத்தை குறைக்க பிரசன்ன ரணதுங்கவினால் பத்திரம் சமர்ப்பிப்பு

#pirasanna ranathunga #Flood #SriLanka #sri lanka tamil news #Minister #Parliament #Lanka4
Kanimoli
2 years ago
கொலன்னாவ வடிநில வெள்ளத்தின் தாக்கத்தை குறைக்க பிரசன்ன ரணதுங்கவினால் பத்திரம் சமர்ப்பிப்பு

கொலன்னாவ வடிநில வெள்ளத்தின் தாக்கத்தை குறைக்கவும் அதற்கு ஒரு நிலையான நீண்டகாலத் தீர்வை நடைமுறைப்படுவதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அமைச்சரவையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனத்தால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது அதற்கான மதிப்பிடப்பட்ட தொகை ரூ 8,700 மில்லியன் ஆகும்.

கொலன்னாவ வடிநில வெள்ளம் தணிப்பு திட்டம் பல கட்டங்களின் கீழ் செயற்படுத்தப்படும். அதன்படி, முதல் கட்டத்தின் கீழ் தஹம்வெல கால்வாய், பஸ்ஸன்ன கால்வாய், சலலிஹினி கால்வாய், இரண்டாம் நிலை கால்வாய் ஆகியன புனரமைப்பு செய்யப்படும்.

மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ், தண்டுதோட்டை கால்வாய் மற்றும் இப்பகுதியில் உள்ள மற்ற கால்வாய்கள் புனரமைக்கப்படவுள்ளதுடன், சலலிஹினி கால்வாய் மற்றும் தண்டுதோட்டை கால்வாய்களில் நீரை வெளியேற்ற இரண்டு நீரேற்று நிலையங்கள் நிறுவவும் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திலும் முன்மொழியப்பட்டுள்ளது.

2020 – 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டத்தின் பணிகள் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் நிலைமை மற்றும் அந்த நேரத்தில் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கு கட்டுமான பணி தாமதமாகியது.

களனி கங்கை நிரம்பி வழிவதால் கொலன்னாவை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொலன்னாவ வடிகால் வாய்க்கால் பாரிய நகரமயமாக்கல் காரணமாக வெள்ளம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அந்த வகையில் கொலன்னாவை மழை நீர் வடிகால் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் நோக்கில், இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!