படுகொலை செய்யப்பட்ட யாழ்பல்கலைக்கழக மாணவர் சுலக்சனின் 31 வது பிறந்தநாள் நினைவு இன்று அனுஷ்டிப்பு

#Death #Sri Lankan Army #University #Student #Tamil Student #Lanka4
Kanimoli
2 years ago
படுகொலை செய்யப்பட்ட யாழ்பல்கலைக்கழக  மாணவர் சுலக்சனின் 31 வது பிறந்தநாள் நினைவு இன்று அனுஷ்டிப்பு

2016 ஆம் ஆண்டு 10 ம் மாதம் 21 ம் திகதி இரவு வேளை வீடு திரும்பிக்கொண்டிருந்த  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்சன், ந.கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 7 வருடங்கள் நிறைவடைந்தும் இன்னும் படுகொலையானவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரான சுலக்சனின் 31 வது பிறந்ததின நினைவு இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

சுன்னாகத்தில் மாணவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட பயணிகள் தரிப்பிடத்தில் பிறந்தநாள் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது. 
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மாணவர் சுலக்சனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது மாணவர் சுலக்சனின் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!