கேகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதி துப்பாக்கி சூட்டில் பலி
#SriLanka
#Kegalle
#Prison
#GunShoot
#Death
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

கேகாலை விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் கைதி ஒருவர் இன்று அதிகாலை 2.45 மணியளவில் சிறைச்சாலை அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கேகாலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதான நபராவார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நபர் சிறைச்சாலைக்கு சற்று தொலைவில் உள்ள மாநகரசபை கட்டிடத்துக்கு அருகில் உள்ள காணியில் வீழ்ந்து காணப்பட்ட நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளால் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



