உள்ளங்கள் உருகாதோ? தொட்டு தொட்டு தேனாக உன்னை தொட்டு உண்டால் தித்திக்குமே மனசு. இன்றைய கவிதை 08-03-2023.
#கவிதை
#காதல்
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#Love
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago
உள்ளங்கள் உருகாதோ?
***************************************
தொட்டு தொட்டு
தேனாக உன்னை
தொட்டு உண்டால்
தித்திக்குமே மனசு.
தட்டி தட்டி உன்
மேனி எல்லாம்
வருடிப் பார்த்தால்
உள்ளம் பூரிக்குமே!
அடி பெண்ணே
என்னுயிர் கண்ணே
மெல்ல புன்னகை
மனம் திளைக்குமே!
மனசுக்குள் உன்
கோயிலுக்கு வாடி.
பூசைகள் நித்தம்
செய்திடுவேன் நானும்.
முத்தம் என்ற பூ
கொண்டு இங்கே
அர்ச்சனை நடந்திட
உள்ளம் உருகாதோ?
அன்பை கொட்டி
அணைத்து நிற்க
ஆனந்தம் வந்து
வீற்றிருக்கும் பாரடி.
........ அன்புடன் நதுநசி.