எனது தந்தைக்கு ஏதாவது நேர்ந்தால், நான் யாரையும் விட்டு வைக்க மாட்டேன் - லாலு பிரசாத் மகள்

#India #Minister
Mani
3 years ago
எனது தந்தைக்கு ஏதாவது நேர்ந்தால், நான் யாரையும் விட்டு வைக்க மாட்டேன் - லாலு பிரசாத் மகள்

லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் பீகாரில் நிலம் எழுதி வாங்கி, ரயில்வேயில் பலருக்கு வேலை வழங்கியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா, தனது சிறுநீரகங்களில் ஒன்றை லாலு பிரசாத்துக்கு தானமாக அளித்து, அவருக்கு புது வாழ்வு அளித்தார். இது தொடர்பாக சிபிஐ நேற்று நேரில் விசாரணை நடத்தியது.

எந்தவித அரசியல் தொடர்பும் இல்லாமல் சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசித்து வரும் அவர், (சி.பி.ஐ.யினர்) தனது அப்பாவைத் துன்புறுத்துவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த தொல்லையால் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் டெல்லி அதிகாரத்தை சும்மா விடமாட்டோம். பொறுமை தீர்ந்து போகிறது.

என் அப்பாவுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யாரையும் விட்டு வைக்க மாட்டேன். நேரம் சக்தி வாய்ந்தது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4