பல்பொருள் அங்காடியில் பொருட்களை திருடிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

#Police #Robbery #Arrest #SriLanka #Lanka4 #sri lanka tamil news #Tamilnews
Prathees
2 years ago
பல்பொருள் அங்காடியில் பொருட்களை திருடிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

சதொச வர்த்தக நிலையத்தில் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடவளை பிரதேசத்தில் உள்ள சதொச கடையொன்றில் இருந்து 1900 ரூபா பெறுமதியான பொருட்களை திருடியதாக முறைப்பாட்டின் பேரில் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கடைக்கு வந்த கான்ஸ்டபிள் பொருட்களை பெற்றுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பணம் கொடுக்காமல் தப்பிச் சென்றதாக கடையின் முகாமையாளர் வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கான்ஸ்டபிளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!