ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிராகரித்த இலங்கை!

#SriLanka #UN #Human #Human Rights #Human activities #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Mayoorikka
2 years ago
ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிராகரித்த இலங்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டவை போன்ற தீர்மானங்கள்இலங்கை மக்களிற்கு உதவியாக அமையப்போவதில்லை என இலங்கை தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை கடந்த வருடம்நிறைவேற்றிய தீர்மானத்தை  ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை மீண்டும் தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 52 அமர்வில்இடம்பெற்ற கூட்டமொன்றின் போது ஜெனீவாவில் உள்ளஇலங்கையின் ஐநாவிற்கான அலுவலகத்தின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலிஅருணதிலக இதனை தெரிவித்துள்ளார்.

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டவை போன்ற தீர்மானங்கள்இலங்கை மக்களிற்கு உதவியாக அமையப்போவதில்லை மாறாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்  நோக்கத்திற்கு அவை பாதிப்பை  ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் உறுப்பு நாடுகளிடம் பற்றாக்குறையாக உள்ள வளங்களை வீணாக்கும் நடவடிக்கை இது என தெரிவித்துள்ள ஹிமாலி அருணதிலக இந்த வளங்களை வேறு நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!