பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை எதிர்வரும் 8 ஆம் திகதியுடன் நிறைவு
#Examination
#exam
#sri lanka tamil news
#Susil Premajayantha
#Lanka4
Kanimoli
2 years ago

கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் பணிகளுக்கு அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்தோர் www.doenets.lk இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்பதுடன், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை எதிர்வரும் 8 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தாமதமடைவதனால் 2022 உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிடுவதும் தாமதமடைகிறது.
2022 கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கான நாளாந்த கொடுப்பனவை 2,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



