16 கிலோவுக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளுடன் நான்கு வெளிநாட்டவர்கள் கைது
#Arrest
#Tamil People
#Tamil
#Tamilnews
#TamilNadu Police
#sri lanka tamil news
#drugs
Prabha Praneetha
2 years ago

குஷ் எனப்படும் 16 கிலோ கிராம் போதைப்பொருளுடன் நான்கு வெளிநாட்டு பிரஜைகள் ஹபராதுவ பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹபராதுவ, ஹிட்டியனகல, தல்பே மற்றும் பிட்டிடுவ ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மூன்று தனித்தனியான சுற்றிவளைப்புகளின் போது வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
21 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



