என்னைப் பற்றி வதந்திகள் பரவி வருகின்றன - நடிகை தமன்னா.

#TamilCinema #Actress
Mani
2 years ago
என்னைப் பற்றி வதந்திகள் பரவி வருகின்றன - நடிகை தமன்னா.

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் ரஜினிகாந்துடன் ஜெயிலரில் தோன்றுகிறார். அரண்மனை 4-ம் பாகத்திலும் அவர் தோன்றுவார். தமன்னாவை பற்றி பல ரொமான்ஸ் வதந்திகள் பரவி வருகிறது. இவர் இந்தி நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்வதாக சிலர் கூறி வருகின்றனர்.

தமன்னா அளித்த பேட்டியில், “எனக்கு எதிராக பல வதந்திகள் வருகின்றன. பல எதிர்மறை விஷயங்கள் வர உள்ளன. யார் வதந்திகளை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. இதையெல்லாம் படித்துவிட்டு நான் காதலிக்கிறேன் என்று தகவல் பரப்பினார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். தென்னிந்திய ரசிகர்கள் என்னை மில்க் பியூட்டி என்பார்கள். "எனது உடலின் நிறம் காரணமாக அவர்கள் என்னை அப்படி அழைக்கிறார்கள். ரசிகர்களின் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன். அவர்களிடமிருந்து எனக்கு நிறைய அன்பு கிடைத்தது."

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!