ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது - பந்துல குணவர்தன !!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #Tamil People #Tamilnews #Bandula Gunawardana
Prabha Praneetha
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது  -  பந்துல குணவர்தன !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக போக்குவரத்து துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் நேற்று  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது, ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க அனைத்து சவால்களையும் பொறுப்பேற்ற ஆறுமாத காலங்களில், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் காரணிகளுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் பொருளாதார காரணிகளுக்கு தற்போது முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!