சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் கலந்துரையாடல்
#IMF
#Ranil wickremesinghe
#Meeting
#China
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Tamilnews
Prathees
2 years ago

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ணுழழஅ அப்ளிகேஷன் ஊடாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பான அனைத்து தரப்பினரிடமிருந்தும் தற்போது சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில் சீனப் பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.



