உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Election #Election Commission #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Mayoorikka
2 years ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றார்.

அரச அச்சகத் திணைக்களம், நிதி அமைச்சு, பொலிஸ் திணைக்களம் உட்பட தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர், திகதி தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்ட தீர்மானங்களுக்கு வந்துள்ள நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான புதிய திகதியை இன்று அறிவிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. 
 
இந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று மதியம்  கூடி தற்போதைய நிலவரங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். இதன்பின்னரே இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!