உனக்காக மட்டும். நெஞ்சில் உண்டு உன்னில் பாசம். இதயம் துடிக்கும் உனக்காக மட்டும். இன்றைய கவிதை 03-03-2023.
#கவிதை
#காதல்
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#Love
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago
உனக்காக மட்டும்
====================
நெஞ்சில் உண்டு
உன்னில் பாசம்.
இதயம் துடிக்கும்
உனக்காக மட்டும்.
காற்று கூட உன்
கதை வந்து சொல்லும்.
நாளை விடிவதும்
உனக்காக இருக்கும்.
பூக்கள் கூட மலரும்
சுகந்தம் வீசி மகிழும்.
தேனீ வந்து தேன்
பருக மறுக்கும் பாராயோ?
அன்பே உனக்காக
இந்த உலகை நான்
மாற்றி வந்து நிற்பேன்.
ஒரு நொடி மாறாயோ?
இதழ் விரித்து நீ
எனை பார்த்து சிரி.
இந்த ஒன்று போதும்
உள்ளம் மகிழ்ந்திட.
நெஞ்சம் குளிரும்
குருதி நிறைந்து
இதயம் கூட சந்தம்
கொண்டு துடிக்கும்.
....... அன்புடன் நதுநசி.