மானிப்பாயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி தீக்கிரையாகிய சம்பவம்: பொலிஸார் விசாரணை

#Jaffna #Police #Arrest #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
மானிப்பாயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி தீக்கிரையாகிய சம்பவம்: பொலிஸார் விசாரணை

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மானிப்பாய் - கட்டுடை பகுதியில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு   இனந்தெரியாதவர்கள் தீ மூட்டியுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் தீ பற்றி எரிவதை அவதானித்தவர்கள் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் முச்சக்கர வண்டி பகுதி அளவில் தீயில் எரிந்து சேதமாகி உள்ளது.

கந்தசாமி ஜெகரூபன் என்பவரது முச்சக்கர வண்டியே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக   பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!