இடியப்பம், பிட்டு என தினமும் இராது இந்த உருளைக்கிழங்கு ரெசிபியை இன்று காலை உணவிற்கு செய்து ஒரு மாற்றத்தைப் பாருங்கள்...

#சமையல் #உணவு #உருளைக்கிழங்கு #தகவல் #லங்கா4 #Cooking #meal #morning #Potato #Lanka4
இடியப்பம், பிட்டு என தினமும் இராது இந்த உருளைக்கிழங்கு ரெசிபியை இன்று காலை உணவிற்கு செய்து ஒரு மாற்றத்தைப் பாருங்கள்...

தினமும் காலையில் ஒரே மாதிரியாக இடியப்பம், பிட்டு, பாண் என்று சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஏதாவது வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் இன்றைய காலை உணவு உங்களுக்கு ரசித்து ருசித்து உண்ணவென்று இந்த குறிப்பின் வாயிலாக தெரிந்து கொள்வோம்.

  • உருளைக்கிழங்கு – 3
  • பெரிய வெங்காயம் – 2
  • பூண்டு – 4 பற்கள்
  • மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  • அரிசிமாவு – 1 கப்
  • எண்ணெய் – 1 ஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

படி -1
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து கொள்ளவும். பின் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து ஆறவிட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு மாவு போல மசித்து கொள்ள வேண்டும்.

படி -2
பின் அதில் பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி போட வேண்டும். அதுபோல பூண்டு பற்களையும் பொடிப்பொடியாக நறுக்கி அதில் சேர்த்து கொள்ளவும்.

படி -3
பிறகு அதில் 1/2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 கப் அளவிற்கு அரிசிமாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
படி -4
பிறகு அதில் 1 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து கலந்து விடவும்.

படி-5
பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி கொள்ளவும். தோசை கல் சூடானதும் அதில் நாம் கரைத்து வைத்திருக்கும் மாவை தோசை போல ஊற்றி கொள்ள வேண்டும்.

தோசை வெந்ததும் எடுத்து பரிமாறி நீங்களும் குடும்பமுமாக உண்டு மகிழவேண்டியது தான் இனி உண்டு.