போராட்டத்தில் கலந்து கொண்ட வேட்பாளர் நபர் ஒருவர் உயிரிழப்பு
#Death
#Colombo
#Protest
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

தேசிய மக்கள் கட்சி நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 61 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக நிவித்திகல உள்ளூராட்சி சபையில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிமல் அமரசிறி என்ற வேட்பாளர் காலமானார்.
நேற்றைய ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்று முற்பகல் 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



