பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக தகாத வார்த்தையை பயன்படுத்தியமைக்காக சுசில் பிரேமஜயந்த மீது ஒழுக்காற்று நடவடிக்கை
#Susil Premajayantha
#Ministry of Education
#education
#Police
#Arrest
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தகாத வார்த்தையை பயன்படுத்தியமைக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும் போதே பிரேமஜயந்த குறித்த வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தினார் என்று முறையிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இருந்த கெமரா அமைச்சரிடம் இருந்து விலக்கியபோதும் அமைச்சர் இந்த வார்த்தையைப் பயன்படுத்திபோது,அவரது ஒலிவாங்கி இயங்கிக்கொண்டிருந்தது.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இந்த விடயத்தை முன்வைத்து, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்



