இத்தாலியில் படகு விபத்துக்குள்ளானதில் 28பேர் உயிரிழந்தமை உறுதிச்செய்யப்பட்டுள்ளது
#Accident
#Eral sea
#Death
#Tamilnews
#Lanka4
Kanimoli
2 years ago
இத்தாலியில் படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த சுமார் 40 குடியேற்றக்காரர்கள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 28பேர் உயிரிழந்தமை உறுதிச்செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தெற்கு இத்தாலிய கடலோர நகரமான குரோடோன் கடல் பகுதியில் அதிக பயணிகள் ஏற்றப்பட்டமை காரணமாக படகு கவிழ்ந்ததில்; ஒரு சிறிய குழந்தை உட்பட்டவர்களே மரணமாகினர்.
மீட்புப் பணியாளர்களின் தகவல்படி 28 உடல்களை தாம் மீட்டதாகவும், மேலும் மூன்று பேர் நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்பட்டதைக் கண்டதாகவும் தெரிவித்தனர். சு
சம்பவத்தின்போது சுமார் 40 பேர் வரை மீட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் இவர்கள் எங்கிருந்து பயணித்தவர்கள் என்ற விடயம் இன்னும் தெரியவரவில்லை