மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்!
.jpg)
மாத்தளை களுதாவளை 2ஆம் வட்டாரம், சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான வேலைத்திட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்களின் சார்பில், மாத்தளை மாநகரசபை முதல்வர் சந்தனம் பிரகாஷால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இதற்கான வேலைத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, களுதாவலை 2ஆம் வட்டாரம், சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை சூழவுள்ள பகுதிகளில் சுமார் 80 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. குடிநீர் வசதி இன்மையால் அப்பகுதி மக்கள் சொல்லொணாத் துயரங்களை சந்திக்க நேர்ந்தது .
.jpg)
இந்நிலையில் மாத்தளை மாநகர முதல்வரின் அழைப்பின்பேரில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அண்மையில் மாத்தளைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
.jpg)
தமது கோரிக்கையை ஏற்று, உறுதி மொழியை நிறைவேற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு பிரதேச மக்களும், மாநகர முதல்வர் சந்தனம் பிரகாசும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.



