தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களில் மழைக்கு வாய்ப்பு

#Rain #HeavyRain
Mani
3 years ago
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களில் மழைக்கு வாய்ப்பு

வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை காலத்தைப் போலவே வெப்பமும், வறண்ட வானிலையும் நிலவுகிறது. இருப்பினும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே காணப்படும்.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். மேலும் மார்ச் 1-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு தெளிவான வானம் மற்றும் வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4