நாட்டில் நிலவி வரும் மத வெறி, வெறுப்புணர்வு சூழ்நிலைக்கு எதிராக நாங்கள் தொடருந்து போராடுவோம் - ராகுல்காந்தி

#India #Tamilnews
Mani
3 years ago
நாட்டில் நிலவி வரும் மத வெறி, வெறுப்புணர்வு சூழ்நிலைக்கு எதிராக நாங்கள் தொடருந்து போராடுவோம் - ராகுல்காந்தி

சத்தீஸ்கர் மாநிலம் நவ்ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில், வரும் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி நேற்று பங்கேற்றனர்.இந்த கூட்டத்திற்கு முன் ராகுல்காந்தி தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,

காங்கிரஸின் 85வது அமர்வு நமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பகிரப்பட்ட பார்வையாகும். அனைவரையும் மதிக்கும் நமது கலாச்சாரமே நமது உண்மையான பலம். தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை சமூகங்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதே எங்கள் நோக்கம். நாட்டில் நிலவும் மதவெறி மற்றும் வெறுப்பு நிலைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.

ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4