தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் தாய் பழனியம்மாள் 95 வயதில் காலமானார்

#India #government #ChiefMinister #world_news #Tamilnews #Death #Lanka4
Prasu
3 years ago
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் தாய் பழனியம்மாள் 95 வயதில் காலமானார்

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவல் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனை சென்று தாயின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். 

கடந்த மாதம் 5ம் தேதி பழனியம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு இருந்தார். 

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஓ பன்னீர்செல்வம் மருத்துவமனை கதறி அழுதார். அதை தொடர்ந்து ஓபிஎஸ் ஆதவாளர்கள் தேனி பெருங்குளம் விரைந்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4