மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி மூலம் பெருமளவு பணம் திருட்டு!
#SriLanka
#Sri Lanka President
#Central Bank
#Tamilnews
#Lanka4
Mayoorikka
2 years ago

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி மூலம் பெருமளவு பணம் திருடப்பட்டுள்ளதாக சமகி ஜன பலவேய மத்துகம தொகுதி அமைப்பாளர் ஜகத் விதான குறிப்பிடுகின்றார்.
குறித்த நாட்களில் சிறிகொத்தாவின் அறைகள் பணத்தால் நிரப்பப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இணைய வானொலி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குமார வெல்கம மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் மிக விரைவில் அரசாங்கத்துடன் இணைவார்கள் எனவும், தற்போதைக்கு திகதி தொடர்பான பிரச்சினையே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.



