ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள்: வெடிக்காத வெடிகுண்டாக இருக்கலாம் என சந்தேகம்
#world_news
#Japan
#BombBlast
#Lanka4
#Tamilnews
#War
Mayoorikka
2 years ago

ஜப்பானின் ஹமாமட்சு கடற்கரையில் 1.5 மீட்டர் விட்டம் கொண்ட மர்மமான கோளப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அந்த பொருள் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.
காலையில் கடற்கரைக்கு வந்த ஒரு சில நகரவாசிகள்தான் கோள வடிவப் பொருளை முதலில் பார்த்தனர்.
பொலிஸாரும் இராணுவத்தினரும் வந்து கடற்கரைக்கு மக்கள் செல்லவிடாமல் தடுத்தனர்.
குறித்த கோள வடிவப் பொருள் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத வெடிகுண்டு என்றும் சந்தேகிக்கப்பட்டது.
வெடிகுண்டு செயலிழப்புக் குழுவினரும் வந்து ஆய்வு செய்தனர்.
ஆய்வு பரிசோதனையில் கோளப் பொருளுக்குள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
கோளப் பொருளுக்கு இரண்டு 'வடிவங்கள்' இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது இது ஏதோவொன்றுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் பின்னர் தெரிவித்தனர்.



