பெண்கள் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தக் கூடாது - தலிபான்கள் அதிரடி

#Afghanistan #Taliban #Women #Ban #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
பெண்கள் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தக் கூடாது - தலிபான்கள் அதிரடி

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ படை வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை அமல்படுத்தினர்.

அதில் பெண்கள் ஹிஜாப் அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும், ஆண்கள் துணை இல்லாமல் பெண்கள் வெளியே செல்லக்கூடாது, ஆண் மருத்துவரிடம் பெண்கள் சிகிச்சை பெறக் கூடாது, பல்கலைக்கழகங்களில் பெண்கள் பயிலக் கூடாது, உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி தலிபான்கள் அவர்களை அடிமைப்படுத்தினர்.

மேலும் அந்நாட்டில் போதிய மருத்துவ வசதி இல்லாமல் பெண்கள் பிரசவத்தின் போது அதிக அளவில் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள பெண்கள் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தக் கூடாது என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். 

இந்த உத்தரவால் அந்நாட்டில் பெண்களின் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என உலக நாடுகள் தலிபான்களுக்கு எச்சரிக்கை எடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!