மேற்கு கரை நப்லஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் மரணம்

#Israel #Attack #GunShoot #Death #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
மேற்கு கரை நப்லஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் மரணம்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. 

அந்த பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இதில் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், மேற்கு கரை நகரமான நப்லஸ் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 

சுமார் 50 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த தாக்குதலுக்கு போராளி குழுவினரும் பதிலடி கொடுத்துள்ளனர். இஸ்ரேலிய ராணுவம் அதன் படைகள் வடக்கு மேற்குக் கரை நகரத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியது. 

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படைகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும், பதிலுக்கு பாலஸ்தீனியர்கள் டயர்களை எரித்தும், ராணுவ வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு படைகள் அந்த நகரை விட்டு சென்றதாக கூறப்படுகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!