ஊருக்குள் வலம் வரும் மலைப்பாம்பு: ஜி.பி.எஸ் கருவி பொருத்த அதிகாரிகள் முடிவு
#America
#National Zoo
#Zoo
Mani
2 years ago

அமெரிக்காவில் ஊருக்குள் வலம் வரும் மலைப்பாம்புகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
புளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பர்மிய மலைப்பாம்புகள் உள்ளன. 20 அடிக்கு மேல் வளரும் இவற்றின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துள்ளது.
இதைத் தவிர வீடுகளில் வளர்க்கப்படும் மலைப்பாம்புகளையும் அவற்றின் உரிமையாளர்கள் காட்டுக்குள் விட்டு விடுகின்றனர். இதனால் உணவு தேடி அலையும் இந்தவகை பாம்புகள் ரக்கூன்கள் மற்றும் ஓபோஸம்கள் உள்ளிட்ட விலங்குகளைத் தேடி ஊருக்குள் வந்து விடுகின்றன.
இதனால் மக்களுக்கும் பிரச்னை ஏற்படுவதால் ஊருக்குள் வரும் மலைப்பாம்புகளை அடையாளம் காணும் வகையில் அவற்றுக்கு ஜிபிஎஸ் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.



