ஆண்கள் இல்லாத வீடுகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது

#SriLanka #Sexual Abuse #Arrest #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Prasu
2 years ago
ஆண்கள் இல்லாத வீடுகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது

ஆண்கள் இல்லாத வீடுகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தமை தொடர்பில்  தேடப்பட்ட “பொட்டே” என்பவரை பொலிஸார்  கைது செய்துள்ளார்.

பத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு  கொலை மிரட்டல் விடுத்து கொடூரமான முறையில் அவர்களை பாலியல்  துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலேயே 37 வயதுடைய சந்தேக நபர் கற்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபரைக்  கைது செய்ய பயாகல பொலிஸார் பல தடவைகள் முயற்சித்தும் சந்தேக நபர் தப்பிச் சென்றமையினால் பொலிஸாரின்  முயற்சிகள் தோல்வியடைந்த நிலையிலேயே அவர்  தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் சில வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து பெண்களை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!