சீன வெளிவிவகார அமைச்சரின் திடீர் ரஷ்ய விஜயம்: சிக்கல் நிலை ஏற்படுமா?

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ரஷ்யா சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை அழைத்துச் செல்லும் நோக்கில் சீன வெளிவிவகார அமைச்சர் மொஸ்கோ சென்றுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதற்காக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மாஸ்கோ செல்ல தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. சீன வெளிவிவகார அமைச்சரின் ரஷ்ய விஜயத்தின் நோக்கங்களில் ஒன்று, அந்த கலந்துரையாடல்களுக்கான களத்தை அமைப்பதாகும்.
ஜேர்மனிக்கு எதிரான இரண்டாம் உலகப் போரின் வெற்றியை ரஷ்யா கொண்டாடும் ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் சீன அதிபரின் ரஷ்ய விஜயம் நடைபெறலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மோதல்கள் உள்ளன. இத்தகைய பின்னணியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று திடீரென உக்ரைன் வந்தார். இவ்வாறானதொரு பின்னணியில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயின் திடீர் ரஷ்ய விஜயம் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்திருந்தன.



