யாரிந்த அறக்கொடை அரசன் தியாகி? அப்படி என்னதான் மக்களுக்கு செய்தார்? ஏன் இவருக்கு வாக்கு போடவேண்டும்? பதில் உள்ளே.

#Election #Election Commission #Lanka4
Kanimoli
2 years ago
யாரிந்த அறக்கொடை அரசன் தியாகி? அப்படி என்னதான் மக்களுக்கு செய்தார்? ஏன் இவருக்கு வாக்கு போடவேண்டும்? பதில் உள்ளே.

அனைவருக்கும் வணக்கம்
உள்ளுராட்சி சபை தேர்தல் 2023
அறக்கொடை அரசன் திரு.வாமதேவா தியாகேந்திரன் ஐயாவின் தலைமையில் சுயேட்சைக் குழு இலக்கம் 3 காஸ் சிலிண்டர் சின்னம் நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபையில் 27 வட்டாரங்களில் சுயேட்சைக்குழு இலக்கம் 3 கொடை வள்ளல் தியாகி ஐயா அவர்கள் களமிறங்கியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

அரசியல் களப்படமற்ற ஆத்மார்த்தமான அறப்பணிகளை  பாரிய அளவில் முன்னெடுத்து சமூக ரிதியான அபிவிருத்தி செயற்திட்டங்களை நிறைவேற்றி நவீன மாநகரை உருவாக்குவது இவரது உயர்ந்த நோக்கமாகும். 

இற்றைக்கு 30 வருடங்களுக்கு மேலாக நாடளாவிய ரீதியில் இனம் மதம் மொழி என பேதமின்றி பல்வேறு பட்ட சமூக பணிகளை தேவை நாடும் மக்களது பலதரப்பட்ட தேவைகளை தனது சொந்த நிதியில் தியாகி அற்ககொடை நிறுவனத்தினுாடாக தியாகி ஐயா செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.

அண்மையில் அரச கொரோனா நிதியத்திற்கு பல கோடி, வீதிகள், வாய்க்கால்கள், குளங்கள் போன்றவற்றை சீர்செய்து புனரமைக்கும் சிறப்பான பணிகளுக்காக பல கோடி பாடசாலைகள் வைத்தியசாலைகள், சனசமூக நிலையங்கள் விளையாட்டுக்கழகங்கள் ஆலயங்கள். அரச திணைக்களங்கள் போன்றவற்றிற்கான பல்வேறு வகையான உதவிகள் தேவை நாடும் மக்களுக்கான நுாற்றுக்கணக்கான வீட்டுத்திட்டங்கள், மலசலகூடங்கள், கிணறுகள் ஏனைய பல்வேறு வகையான வீட்டு வசதிகள். இடி மின்னல் மழை வெள்ளம் மண்சரிவு போன்ற இன்னோரன்ன இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கான உடனடி உதவிகள். 

துயர சம்பவங்களை கண்டறிந்து உடனடியாக அங்கு சென்று அவர்களது தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றுதல். 
மாற்று திறனாளிகளின் திறமைகளுக்கு களமமைத்து அவர்களது குறைகளுக்கு சிகிச்சைகளினுாடாக நிவர்த்தி செய்தல். 
மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களை வழங்குதல் அவர்களது கல்வி செயற்பாடுகளுக்கான மாதாந்த உதவுத்தொகைகளை வழங்குதல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்பு தொகைகளை வழங்குதல். 

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான மாதாந்த உதவுதொகைகள். மற்றும் அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கள், வறுமை கோட்டுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மாதாந்த உலர் உணவுகள் மற்றும்  நிதி கொடுப்பனவுகள்,வீதியோர வியாபாரிகள் மற்றும் ஏனைய சுயதொழில் முயற்சியாளர்களுக்கான உதவுதொகைகள். கலைத்துறையை தமது பிரதான வருமானமாக கொண்டு வாழுகின்ற கலைஞர்களுக்கான பல்வேறு பட்ட உதவிகள். வங்கிக்கடன்களை காப்புறுதிக்கட்டணங்களை செலுத்த முடியாது அல்லல் படுவோருக்கு தவணை முறைக்கொடுப்பனவுகள் போன்ற எண்ணிலடங்கா இன்னும் பல உயர்வான சேவைகளை இதில் குறிப்பிடலாம்.

இவைகளுகு அப்பால் இன்னும் பல உயர்வான அபிவிருத்தி பணிகளையும் சமூக சேவைகளையும் செய்வதற்கான மக்கள் ஆணையைப்பெறுவதற்காகவே கொடை வள்ளல் தியாகி ஐயா  அவர்கள் இம்முறை மாநகரசபை தேர்தலில் களமிறங்கியுள்ளார். தற்போது தியாகி ஐயா அவர்களளோடு பல கட்சிகளோடு இணைந்து சேவை புரிந்த சேவையாளரும் கட்சிபேதமின்றி சேவையாற்றும் சமூக நலன் கொண்ட சேவையாளர்களும் முழு மனதோடு இணைந்துள்ளார்கள். 

2025ல் சகல வசதிகளும் அழகும் கொண்ட நாட்டின் சிறந்த யாழ் மாநகர் எனும் தொனிப்பொருளில் சேவை நலன் விரும்பும் நண்பர்களோடு இணைந்து காலத்தின் தேவையறிந்து சேவை செய்வதற்காகவே சுயேட்சைக்குழு இலக்கம் 3 காஸ் சிலிண்டர் சின்னத்தில் தியாகி ஐயா அவர்கள் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளார். உள்ளுராட்சி சபைகள் செய்கின்ற பல அடிப்படை சேவைகளையும் அதற்கு அப்பால் தனது மக்களுக்கு தேவையான பல உதவிகளையும் பல கோடி ரூபாய் பெறுமதியான மக்களின் நலன்கருதிய செயற்திட்டங்களையும் தனது சொந்த நிதியில் அறக்கொடை நிதியத்தினுாடாக தனது குடும்பத்தின் சொந்தப்பணத்தில் தொடர்ந்தும் செய்வதற்கு தியாகி ஐயா அவர்கள் தயாராகி உள்ளார். 

ஆம் கட்சி அரசியலற்ற முழுமையான சேவை நோக்கம் கொண்ட  கொடை  வள்ளல் தியாகி ஐயா அவர்களை நாம் முழுமையாக நம்புவோம்.
அவருக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து  வாக்களித்து இத்தேர்தலின் மூலம் சரியான களம் அமைத்துக் கொடுப்போம். யாழ் நகரம் வளர்ச்சி பெற அனைத்து மக்கள் வாழ்விலும் மலர்ச்சி ஏற்பட எமது நகரை நாடி வரும் அன்பர்கள் எமது சேவையில் மகிழ்ச்சி பெற நாம் அனைவரும் ஒன்றிணைவோம். 

சிந்தித்து உங்களது வாக்குகளை சிதறாமல் சுயேட்சைக்குழு இலக்கம் 3  காஸ் சிலிண்டர் சின்னம் வழங்குங்கள். 27 வடடாரங்களிலும் எமது காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களித்து முழுமையான அங்கீகாரத்தை மக்களாகிய நீங்கள் வழங்கும் பட்சத்தில் யாழ் மாநகர சபையின் வட்டாரத்தின் அபிவிருத்தியில் வளர்ச்சி உச்சம் பெறுவது நிச்சயம்.
நன்றி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!