பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளிவந்த தகவலால் தமிழ்நாடு மாநில புலனாய்வு பிரிவு உளவுத்துறை குழு ஒன்றை அமைத்துள்ளது.

#SriLanka #Sri Lankan Army #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
 பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளிவந்த தகவலால் தமிழ்நாடு மாநில புலனாய்வு பிரிவு உளவுத்துறை குழு ஒன்றை அமைத்துள்ளது.

 வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக, தமிழக அரசியல்வாதி நெடுமாறன் கூறியிருக்கும் கருத்து தொடர்பில் தொடர்ந்தும் வெளிப்படுத்தல்கள் எதிர்பார்க்கப்படுவதாக ஐஏஎன்எஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

 நெடுமாறனின் வெளிப்பாட்டை மத்திய உளவு அமைப்புகளோ, உலக உளவுத்துறையோ  கீழ் வைக்கவில்லை.

 தமிழ்நாடு மாநில புலனாய்வு பிரிவு உளவுத்துறை குழு ஒன்றையும் அமைத்துள்ளதாக ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்பிக்க பல்வேறு போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட சம்பவங்களை ஐஏஎன்எஸ் சுட்டிக்காட்டியுள்ளது

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் செயலிழந்த கணக்குகளை மீட்டெடுக்கும் முயற்சியின்போது, இலங்கையைச் சேர்ந்த கனேடிய நாட்டவரான மேரி என்பவர் கைது செய்யப்பட்டமையையும் அந்த செய்திச்சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது விசாரணையின் ஆரம்ப நாட்கள் என்றநிலையில், இந்த தகவல் தமிழ் அரசியலை எப்படி முன்னெடுத்துச் செல்லும் என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் ஐஏஎன்எஸ் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!