கேலி கிண்டல்களால் வீட்டிற்குள் முடங்கிப் போன விக்னேஷ் சிவனுக்கு தேடி சென்று துக்கம் விசாரித்த சினிமா பிரபலங்கள்.

#Cinema #TamilCinema #Lanka4
Kanimoli
2 years ago
கேலி கிண்டல்களால் வீட்டிற்குள் முடங்கிப் போன விக்னேஷ் சிவனுக்கு தேடி சென்று துக்கம் விசாரித்த சினிமா பிரபலங்கள்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன், அஜித் கூட்டணியில் ஏகே 62 படம் உருவாக இருப்பதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த வாய்ப்பு முழுக்க முழுக்க விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா மூலம் தான் கிடைத்ததாக கூறப்பட்டது.

இதனால் விக்னேஷ் சிவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தது மட்டுமின்றி, தனது ட்விட்டர் பக்கத்திலும் தான் இயக்கிய படங்களின் வரிசையில் ஏகே 62 என்ற படத்தையும் சேர்த்திருந்தார். ஆனால் கடைசியில் ஏகே 62 படத்திற்கான கதை அஜித்துக்கு பிடிக்காமல் போனதால், அந்தப் பட வாய்ப்பு இயக்குனர் மகிழ்திருமேனிக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சோகமான ஸ்டேட்டஸை பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி நயன்தாராவும் விக்னேஷ் சிவனை திட்டி தீர்த்திருக்கிறார். ஏனென்றால் அஜித், லைக்கா நிறுவனமும் விக்னேஷ் சிவனுக்கு கதையை தயார் செய்வதற்கு நேரம் கொடுத்தாலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் ஏதோ குப்பை கதையை அவர்கள் முன்பு நீட்டியதால் கடுப்பாகி படத்தில் இருந்து தூக்கி விட்டனர்.

இதனால் பல கேலி கிண்டலுக்கு ஆளான விக்னேஷ் சிவன் தற்போது மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது. இதனால் அடுத்த பட வாய்ப்பை யார் கொடுப்பார்கள்? எப்படி படம் பண்ணுவது? என்று யோசித்து வருகிறாராம். இதனால் அவர் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளார்.

இதை அறிந்த, அவருக்கு நெருக்கமான பிரபலங்கள் பலரும் தேடி சென்று ஆறுதல் அளிக்கின்றனர். வெங்கட் பிரபு, சிறுத்தை சிவா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் விக்னேஷ் சிவனுக்கு தொலைபேசியில் வாயிலாக ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த அளவிற்கு மனம் வருத்தப்பட்டு வீட்டிற்குள்ளே இருக்கிறாராம். வெளியில் வருவதில்லை என்று கூறுகிறார்கள். இதனால் இவர் ஏதேனும் தவறான முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சினிமா பிரபலங்கள் நட்பு ரீதியாக ஆறுதல் கூறி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!