அமெரிக்காவின் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத தலைவர் ஒருவர் உயிரிழப்பு!

#world_news #America #Death #Attack #Lanka4
Mayoorikka
2 years ago
அமெரிக்காவின்  தாக்குதலில்  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத தலைவர் ஒருவர் உயிரிழப்பு!

வடகிழக்கு சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத தலைவர்  ஒருவர் கொல்லப்பட்டார்.

சிரியாவில் பதுங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் மூத்த தலைவர் என்று கூறப்படும் ஹம்சா அல் ஹோம்சி, குர்திஷ் போராளிகளும், அமெரிக்க மத்தியப் படையும் இணைந்து நடத்திய நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையில் நான்கு அமெரிக்க வீரர்களும் சிறப்புப் பயிற்சி பெற்ற நாயும் காயமடைந்ததாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை பின்னர் அறிவித்தது.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் மூத்த தலைவரான ஹம்சா அல்-ஹோம்சி, கிழக்கு சிரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கும் மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும் பொறுப்பாக இருந்ததாக அமெரிக்க பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கடந்த வியாழன் அன்று மற்றொரு நடவடிக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத் தலைவரைக் கொல்ல அமெரிக்க பாதுகாப்புப் படையினர் செயற்பட்டுள்ளதுடன், அந்த நடவடிக்கை தொடர்பான தகவல்கள் இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!