பாக்டீரியா உண்டாகி ஊதா நிறத்தில் மாறிய சிறுவனின் கால்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
.jpg)
அமெரிக்கா
கணுக்காலில் காயமடைந்த 11 வயது சிறுவன், அரியவகை தசை உண்ணும் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tread Mill-லிருந்து கால் இடறி விழுந்து, கணுக்காலில் சிராய்ப்பு ஏற்பட்ட ஜெஸ்ஸி பிரவுனுக்கு, அடுத்த சில நாட்களில் கால் ஊதா நிறத்தில் மாறத் தொடங்கியுள்ளது.
ஸ்கேன் பரிசோதனையில், சிறுவனின் காலுக்குள் சதை பகுதிகள் மாயமாகி 'நெக்ரோடைசிங் ஃபாசிட்டிஸ்' (necrotizing fasciitis) என்ற தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
சிராய்ப்பு ஏற்பட்ட தோல் பகுதி வழியாக குரூப்-ஏ Streptococcus பேக்டீரியா ஊடுருவி, அசுர வேகத்தில் சிறுவனனின் தசைகளை உண்டுள்ளன.
ஐ.சி.யு-வில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். காயமடைந்த பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசினால் உடனடியாக மருத்துவரை அனுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



