தூங்கும்போது கான்டெக்ட் லென்ஸை கழட்டாமல் உறங்கிய இளைஞன்: நோய் பாதிப்பு ஏற்பட்டு கண் பார்வை பறிபோன பரிதாபம்

#America #world_news #Health
Mani
2 years ago
தூங்கும்போது கான்டெக்ட் லென்ஸை கழட்டாமல் உறங்கிய இளைஞன்: நோய் பாதிப்பு ஏற்பட்டு கண் பார்வை பறிபோன பரிதாபம்

அமெரிக்கா

தூங்கும் போது காண்டாக்ட் லென்ஸை கழட்டாமல் உறங்கிய இளைஞருக்கு சதை உண்ணும் ஒட்டுண்ணி கண்ணை தின்று கண்பார்வை பறிபோன சம்பவம் அரங்கேறியுள்ளது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 21 வயதான மைக் க்ரம்ஹோல்ஸ் என்பவர் ஏழுவருடங்களாக கான்டாக்ட் லென்ஸ் அணிந்து வருகிறார்.

இந்நிலையில் ஒருநாள் தனது காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் மைக் தூங்கியதாக சொல்லப்படுகிறது, இதனால் தன் கண்ணில் வழக்கத்திற்கு மாறாக வலி ஏற்படுவதை உணர்ந்த அவர் கண் மருத்துவரை அணுகியிருக்கிறார்..

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , மைக்கிற்கு HSV-1 நோய் இருப்பதை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இறுதியில் அவரது கண்ணில் அகந்தமோபா கெராடிடிஸ் எனப்படும் ஒரு அரிதான சதை உண்ணும் ஒட்டுண்ணி இருப்பது கண்டறியப்பட்டது. அது அவரது வலது கண்ணை தின்று வந்திருக்கிறது. இதனால் மைக் கண்பார்வையை இழந்து பரிதவித்து வருகிறார்.

அழகுக்காகவும், கண் பார்வை தெளிவாக தெரிவதற்காகவும் பயன்படுத்தப்படும் காண்டாக்ட் லென்சே இளைஞரின் கண்பார்வையை பறித்த சம்பவம் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!