சமந்தா போல நடிகை அனுஷ்காவும் விசித்திர வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

#Cinema #TamilCinema #Lanka4
Kanimoli
2 years ago
சமந்தா போல நடிகை அனுஷ்காவும் விசித்திர வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்னும் பிரச்சினையால் ரொம்பவே அவதிப்பட்டார். மருந்து, மாத்திரை போன்ற பலவற்றின் உதவியால் அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் அவர் இப்போது நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இதனால் அவருடைய அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இவரை போலவே நடிகை அனுஷ்காவும் விசித்திர வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி இடத்தில் இருந்த அனுஷ்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் பாகுபலி திரைப்படத்தில் தேவசேனாவாக வந்து மிரட்டிய இவர் உலக அளவில் பிரபலமாக இருக்கிறார்.

தற்போது ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு சிரிக்கும் வியாதி இருக்கிறதாம். இதெல்லாம் ஒரு வியாதியா என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அனுஷ்கா சிரிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து இடைவிடாமல் 20 நிமிடங்கள் வரை சிரித்துக் கொண்டே இருப்பாராம். இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

இப்படி அவர் தொடர்ந்து சிரிப்பதால் சில சமயங்களில் படப்பிடிப்பு தாமதமாகும் நிலையும் ஏற்பட்டிருக்கிறதாம். இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் பொதுவாகவே சிலர் சிரிப்பது ரொம்பவும் வித்தியாசமாக இருக்கும். அதாவது விக்கி விக்கி சிரிப்பது, வித்தியாசமான சத்தம் எழுப்பி சிரிப்பது என்று பல வகைகள் இருக்கிறது.

அவ்வளவு ஏன் சில நேரங்களில் சந்தர்ப்ப சூழ்நிலை தெரியாமல் கூட சிலருக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிடும். அந்த வகையில் அனுஷ்காவின் இந்த ரகசியம் ஆச்சரியமாக இருக்கிறது. ஏற்கனவே இவர் அதிகப்படியான எடையால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்படி ஒரு பிரச்சனையும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்து இருக்கிறது.

இந்த விவகாரம் வேறு ஒரு பிரச்சனைக்கும் வழி வகுத்திருக்கிறது. அதாவது எடை அதிகரிப்பால் தள்ளிக்கொண்டே சென்ற அனுஷ்காவின் திருமணம் இப்படி ஒரு காரணத்தாலும் தடைப்பட்டு நிற்கிறதாம். தற்போது 40 வயதை கடந்திருக்கும் அனுஷ்காவுக்கு திருமணமாகவில்லை என்ற கவலை ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் இருக்கிறது. இந்த நேரத்தில் அவர் பற்றிய இப்படி ஒரு செய்தி வெளிவந்திருப்பது சில விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!