மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை தீர்மானம்: மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

#SriLanka #Sri Lanka President #Electricity Bill #Court Order #Lanka4
Mayoorikka
2 years ago
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை தீர்மானம்: மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக சுற்றாடல் நீதி   மற்றும் இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் இணைந்து தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) தீர்ப்பளித்துள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் மற்றும் அமைச்சரவை குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!